துருக்கி: திருமண வரவேற்பில் தற்கொலை தாக்குதல், 30 பேர் பலி

படத்தின் காப்புரிமை aptn

துருக்கியின் தென் கிழக்கில் சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைதிருக்கும் காஸியன்டெப் என்ற இடத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்கொலை குண்டுதாரி ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது என்று துணைப் பிரதமர் மகமட் சிம்செக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் இருக்கலாம் என்று அதிபர் ரசிப் தாயிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசு குழுவினருக்கும், தடை செய்யப்பட்டிருக்கும் பிகேகே என்ற குர்து இனத்தவர் இயக்கம் மற்றும் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எர்துவான் குற்றம் சாட்டுகின்ற அமெரிக்காவில் வாழும் மதப் போதகரான ஃபெதுல்லா குலெனை பின்பற்றுவோருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.