இரான் விமானத்தளத்தை ரஷியா பயன்படுத்துவது நிறுத்தம்

சிரியா மீது தாக்குதல் நடத்த இரானின் விமானத் தளத்தை பயன்படுத்துவதை தாற்காலிமாக நிறுத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

டெக்ரானில் உள்ள ரஷிய தூதர், ரஷியா தனது உபகரணங்களை தற்போது விலக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தில் இரானின் விமானத்தளத்தை பயன்படுத்த ரஹியாவிற்கு எந்த தடையையும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இரானின் பாதுகாப்புதுறை அமைச்சர் ஹுசைன் டெகான், இரானின் விமானத் தளத்திலிருந்து ரஷியா செயல்படுவது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிரியாவில் நடந்த போரில் ரஷியா மற்றும் இரான் ஆகிய இருநாடுகளும் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு ஆதாரவு அளித்தன. ஆனால் இரான் அந்த போரில் தனது பங்கு குறித்த குறைந்த தகவல்களையே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது