சிரியா எல்லையில் துருக்கிக்கு ஐ.எஸ். சவால்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

துருக்கிய ஆதரவு போராளிகள் ஐ.எஸ் பிடியில் இருக்கும் எல்லை நகரமான ஜராப்லஸை கைப்பற்ற தயாராகி வருவதாக வந்த தகவலையடுத்து மெவலூட் சவுஷவ்லுவின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் துருக்கியின் தென் நகரமான காசியெண்டெப்பில் நடந்த குண்டு வெடிப்பு, ஐ.எஸ் அமைப்பால் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், கடந்த வருடம் இரண்டு ஐ.எஸ் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைப் போன்று உள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற அந்த குண்டு வெடிப்பில் குறைந்தது ஐம்பது பேர் கொல்லப்பட்டனர் அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.