ஜோஹனஸ்பர்க் நகர மேயர் பதவியை இழந்துள்ள ஆளும் ஏஎன்சி

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு, நிறவெறி அரசு வீழ்ந்த பின்னர், முதல்முறையாக, தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ஏஎன் சி), நாட்டின் பெரிய நகரமும், பொருளாதார மையமுமான ஜோஹனஸ்பெர்க் நகரின் ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா (கோப்பு படம்)

ஜோஹனஸ்பெர்க் நகரின் கவுன்சிலர்களால் எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஹெர்மன் மஸாபா நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நகர நிர்வாகத்தின் வேர் மற்றும் கிளைகளை தான் சீர்திருத்தப் போவாதாக மஸாபா வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த மாத துவக்கத்தில் நாடெங்கும் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மோசமாக தோல்வியடைந்த ஏஎன்சி, பல மாவட்டங்களிலும், தங்கள் கட்சியின் சார்பாக ஒரு பூரண வெற்றியாளரை உருவாக்கத் தவறி விட்டது.

தங்களுக்கு வலிமையான செல்வாக்கு உள்ள பகுதிகளான பிரிட்டோரியா மற்றும் போர்ட் எலிசபெத் போன்ற இடங்களையும் அக்கட்சி இழந்துள்ளது.