பாலத்தீன ஆயுத தயாரிப்பு, கடத்தல் வலையமைப்பை அழித்தது இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேலிய ராணுவம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரத்தில் இருந்த பாலத்தீன ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் கடத்தல் வலையமைப்பை கலைத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்புப்படம்

ராணுவம் இரவு முழுவதும் நடந்த பெரிய நடவடிக்கையில், பெத்லஹேம், ஹெப்ரான் பகுதிகளில் பல இடங்களில், 20 ஆயுத உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.

இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யபட்டுள்ளனர்.