காங்கோவில் வேலைநிறுத்தத்திற்கு குறைந்த ஆதரவு
தேசிய அளவில் வேலைநிறுத்தத்திற்கு எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்பிற்கு ஜனநாயக குடியரசு காங்கோவில் மிக குறைவான அளவே ஆதரவு கிடைத்தது.
தலைநகர் கின்ஷாசாவில் பல கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. சாலைகள் , வழக்கத்தை விட அமைதியாக இருந்தன. ஆனால் நகரத்தின் முக்கிய வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் வழக்கம் போல் பெரிய அளவில் தொடர்ந்தன.
அதிபர் ஜோசப் கபிலா டிசம்பர் மாதம் தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தாமதம் இருப்பதாலும், மூன்றாவது முறையாக பதவி வகிக்க அரசியல் அமைப்பின் விதிகளின் படி தடை இருந்தாலும், கபிலா பதவியில் இருக்க திட்டமிட்டிருப்பதால், அது எதிர்கட்சியினரின் அச்சத்தை அதிகரித்துள்ளது.