பாலத்தீன சிறையில் கொல்லப்பட்ட நபர் குறித்த விசாரணை தொடக்கம்

மேற்குக்கரை நகரமான நப்லஸில் சிறையில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து விசாரணையை தொடங்கியுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption கோப்புப்படம்

கடந்த வாரம் இரண்டு போலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அதில் ஈடுபட்ட குழுவின் தலைவர்தான் இந்த நபர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், பாலத்தீன சிறைகளில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மிக தீவிரமான விமர்சனங்களை வைத்துள்ளனர்.

அவர்கள் சிறையில் துன்புறுத்தபடுவது மிக பொதுவான ஒன்று மற்றும் அவர்கள் விளைவுகளைப் பற்றிக் கவலை இல்லாமல் இதை செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.