வடக்கு சிரியாவில் தொடரும் துருக்கியின் பீரங்கித் தாக்குதல்

வடக்கு சிரியாவின் எல்லையில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பகுதிகளில் துருக்கியின் பீரங்கித் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் ஜராப்ளஸை பிடிக்க துருக்கி ஆதரவு பெற்ற போராளிகள் பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது.

தீவிரவாதிகள் எதிர்தாக்குதல் தொடுத்துள்ளனர். இரண்டு ஷெல் குண்டுகள் துருக்கி நகரமான கர்காமிஸில் விழுந்துள்ளன.

மேலும் அதன் அருகில் உள்ள இடங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வார இறுதியில் துருக்கியின் தென் பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.எஸ்.படையினர் மீது துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், முன்னரங்கப் பகுதியில் இருந்து ஐ.எஸ்.படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் துருக்கி வலியுறுத்தியுள்ளது.