துருக்கி: தொடரும் துயரம்

துருக்கி: தொடரும் துயரம்

சிரியாவில் இருந்து வந்த இரு ஷெல்கள் துருக்கிய எல்லை நகரை தாக்கிய பின்னர், வடக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பகுதிகள் மீது துருக்கி ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

துருக்கிய ஆதரவுடனான சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் எல்லையின் துருக்கிய பக்கத்தில் கூடியுள்ளனர்.

ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை நகரான ஜராப்ளஸ் மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராகிவருகின்றனர். குர்து போராளிகளும் அதே நகரம் மீது தாக்குதலை அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்தவார இறுதியில் துருக்கிய நகரான காஸியாந்தெப்பில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இவை நடக்கின்றன.

அங்குள்ள நிலைமைகள் குறித்து பிபிசி செய்தியாளர் வழங்கும் செய்தித் தொகுப்பு.