பாலைவனத்தில் ஒரு தங்க வேட்டை

பாலைவனத்தில் ஒரு தங்க வேட்டை

இது ஆப்ரிக்காவின் புதிய தங்க வேட்டை. மரித்தீனியாவின் பாலைவனத்தில், தங்களது அதிர்ஷ்டத்தை தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் வந்து குவிகிறார்கள்.

சுமார் நாற்பது டிகிரி செல்ஷியஸ் வெய்யிலில் முதுகு ஒடிய மக்கள் சுட்டெரிக்கும் மணலைத் தோண்டுகிறார்கள். ஆனால் இதற்கான வெகுமதி பெரிதாக இருக்கலாம்.

சிலருக்கு கிடைத்த தங்கம் அவர்களின் வாழ்வை ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது.

அரசு விதிகளை தளர்த்தியிருப்பதைத்தொடர்ந்து இந்த தங்க வேட்டையை ஊக்குவித்திருக்கிறது. ஆனால், இதனால் எல்லோருக்கும் பயன் கிட்டவில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர்.