நைஜீரியாவில் அன்னியச் செலாவணியை ஒப்படைக்கத் தவறிய 9 வங்கிகள்

நைஜீரியாவில் ஒன்பது உள்ளூர் வங்கிகள் அரசின் இரண்டு பில்லியன் அன்னியச் செலாவணியை ஒப்படைக்காமல் இருந்ததால், அந்த வங்கிகள் வெளிநாட்டு கரன்ஸி வர்த்தகத்தில் ஈடுபடுவதை மத்திய அரசு இடைநிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை none

இந்த நகர்வு, கடந்த ஆண்டு , ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு அரசு நிறுவனங்களை, ஒரே அரசுக் கணக்கில் இணைக்க வேண்டும் என்று அதிபர் முகமது புகாரி செய்த முடிவோடு தொடர்புடையது.

பாதிக்கப்பட்ட வங்கியை சேர்ந்த ஓர் அதிகாரி, அன்னியச் செலாவணி பற்றாக்குறை காரணமாகவே, வங்கிகள் அவற்றைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை என்று தெரிவித்தார்.

எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக, நைஜீரியா கடுமையான பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. எண்ணெய் வளம்தான் நாட்டின் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.