சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த உக்ரைனின் 25-ஆவது சுதந்திர தினம்

சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற 25வது ஆண்டின் சுதந்திர தினத்தை குறிக்க உக்ரைன் பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்துகிறது.

படத்தின் காப்புரிமை AFP

ஆயிரம் படைவீரர்கள் டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களுடன் கியேவின் சுதந்திர சதுக்கத்தை கடந்து செல்வர்கள்.

இந்த இடத்தில் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவின் ஆதரவாளராக அறியப்பட்ட அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறுவதற்கான போரட்டங்கள் நடந்தன.

கிழக்கு பகுதியில் ரஷ்யாவால் ஆதரிக்கப்படும் பிரிவினைவாதிகளோடு நடக்கும் தொடர் சண்டைகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்ட க்ரைமியாவிற்கு எதிராக சமீப காலமாக அதிகரித்துள்ள பதற்றம் காரணமாகவும் கியேவ் அரசாங்கம் ரஷ்யாவிற்கு சமிக்ஞைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.