புர்கினி ஆடைக்கு தடை; சட்டரீதியானதா என ஆராயும் பிரான்ஸ் நீதிமன்றம்

பிரான்ஸ் நகரங்களில் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது சட்ட ரீதியானதா என பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை EPA

பிரான்ஸ் நகரங்களின் இந்த தடை, முஸ்லிம் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று ஏன் கூறப்பட வேண்டும் என்றும், இந்த புர்கினி உடை பிரான்ஸ் குடியரசின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுகிறதா என்றும் சூடான விவாதங்களை தூண்டியுள்ளது.

போலிஸார் முஸ்லிம் பெண் ஒருவரின் அருகில் நின்று இந்த தடையை செயல்படுத்துமாறு கூறிய புகைப்படம் வெளியானதற்கு பிறகு இந்த சர்ச்சை தீவிரமாகியுள்ளது.

நீஸ் நகரில் உள்ள கீழ் நீதிமன்றம் ஒன்று இது தேவையானது மற்றும் சரியானதே என்று கூறி இந்த தடையை உறுதி செய்திருந்தது

பிரான்ஸ் அரசு சபைக்கு இது குறித்து தீர்ப்பளிக்க இன்னும் 48 மணி நேரங்கள் உள்ளன.