இராக்: மொசூல் நகரிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

படத்தின் காப்புரிமை Reuters

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் முக்கிய வலுவிடமாக விளங்கிய மொசூல் நகரின் எண்ணெய் உற்பத்திய பிராந்தியத்திலிருந்து அந்த தீவிரவாதிகளை வெளியேற்றியிருப்பதாக இராக்கின் அரசப்படை தெரிவித்திருக்கிறது.

அந்த நகரத்தை மீண்டும் கைபற்றுவதற்கு மிக முக்கிய காலடியாக காயாரா பிராந்திய வெற்றி அமைவதாக பிரதமர் ஹைதர் அல்-அபடி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

கடந்த மாதம், இராக் படைப்பிரிவுகள் காயாராவிலுள்ள விமானத் தளத்தை மீண்டும் கைபற்றின.

இந்த வெற்றியை அரசு கொண்டாடுகின்ற அதேவேளையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருகின்ற பாதுகாப்பு அமைச்சர் காலெட் அல்-ஒபெய்தியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

பிரதமரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஒபெய்தி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார்.