இந்தியாவில் பருத்தி விதை தயாரிப்பு விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது மொன்சாண்டோ

படத்தின் காப்புரிமை AP

அடுத்த தலைமுறை மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி வேண்டுகின்ற விண்ணப்பத்தை அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மொன்சான்டோ திரும்பப் பெற்றிருக்கிறது.

மொன்சான்டோவின் தொழில்நுட்பத்தை உள்ளூர் விதை நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மொன்சான்டோவை கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

புதிய பருத்தி விதைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பாகவும் விவசாயப் பொருட்களின் வர்த்தக ஜாம்பவானான இந்த நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமையிலும் உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

சமீபத்திய ஆண்டுகளில், பருத்தி உற்பத்தியில் இந்தியா சீனாவுக்கு அடுத்தபடியாக இரணடாவது இடத்தில் உள்ளது.

மொன்சான்டோ முன்பு வழங்கிய பூச்சி தொற்றால் பாதிக்காத விதைகளின் வகைகள் தான் அதிக பருத்தி உற்பத்திற்கு வழிவகுத்தது.

இத்தகைய விதை வகைகள்தான் இந்தியாவில் இப்போது விற்பனையாகும் பருத்தி விதை வகைகளில் 90 சதவீதமாகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகமாக கவரக்கூடியதாக இந்தியா விளங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் அடியாக மொன்சான்டோவின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.