அலெப்போ தாக்குதலில் 11 குழந்தைகள் பலி

சிரியாவின் அலெப்போ நகரின் அண்டைப் பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய தாக்குதலில், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை

அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகளால் பலியான ஐம்பது பேரில் இக்குழந்தைகளும் அடங்குவர் என சிரிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிக்கப்பட்ட நகரத்தின் மேற்குப் பகுதியில், அரசுப்பிடியின் பகுதியில் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவிப்பையடுத்து வந்துள்ளது.