காட்டு யானைகள் பயிர்களை அழிப்பதை தடுக்க தாய்லாந்து விவசாயிகள் நூதன முயற்சி

தங்களின் விவசாய பயிர்களை, காட்டு யானைகள் நாசம் செய்வதை தடுக்க, தாய்லாந்தில் உள்ள விவசாயிகள் தேனீக்களை பயன்படுத்துகின்றனர்.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்புப் படம்

தாய்லாந்தில் கிழக்கு மாகாணமான சந்தாபூரியில் தேனீக்களை கொண்டு யானைகளை அச்சறுத்தும் இந்த நூதன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மின்சார வேலிகளும், பட்டாசுகளும் கூட யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முடியவில்லை என்பதால், யானைகளுக்கு மீதுள்ள அச்சத்தை நன்கு உணர்ந்த விவசாயிகள் அவற்றை பயன்படுத்தி தங்களை விவசாய பயிர்களை காப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய நிலங்களுக்கு குறுக்கே, ஒரு கயிற்றினால் தேன் கூடுகளை விவசாயிகள் இணைத்து வைத்துள்ளனர். விவசாய நிலங்களுக்குள் நுழைய காட்டு யானைகள் முயற்சி செய்யும் போது, கயிற்றினை சற்றே வேகமாக விவசாயிகள் அசைப்பர். இதனால், கோபமுற்ற தேனீக்கள் உடனடியாக யானைகள் மீது படையெடுக்க தொடங்கி விடும்.

இந்த நூதன திட்டம் ஆப்ரிக்காவில் பல ஆன்டுகளாக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.