இத்தாலியில் முக்கிய பாதையை துண்டித்திருக்கும் பலமான நில அதிர்வு

படத்தின் காப்புரிமை Google AP

இத்தாலியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அவதியுறும் அமத்ரைஸ் நகருக்கு செல்லும் முக்கிய பாதை ஒன்று பலமான நில அதிர்வால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு தான் இடிபாடுகளில் யாராவது புதையுண்டு இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறர்கள்.

படத்தின் காப்புரிமை AP

அவசர மீட்புதவி அணிகள் பயன்படுத்தி வந்த இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய வழியில் அமைந்திருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 260-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

சனிக்கிழமையை ஒரு நாள் துக்கநாளாக அனுசரிக்க இத்தாலி அரசு அறிவித்திருக்கிறது.

நாடளவில் நடத்தப்படவிருக்கும் இறுதிச்சடங்கு நிகழ்வில் அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா கலந்து கொள்ள இருக்கிறார்.