வடகொரியாவில் 23 ஆண்டில் முதல் முறையாக ஆளுங்கட்சியின் இளைஞர் அணி மாநாடு

கடந்த 23 ஆண்டுகாலத்தில், வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி தனது முதல் இளைஞர் அணி மாநாட்டை கூட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிம் ஜோங்-உன்

வட கொரியாவைச் சேர்ந்த 14 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர்களாக செயல்பட வேண்டும்.

நாட்டின் பலம் வாய்ந்த ராணுவத்தின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் முயற்சியாக, வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்,தொழிலாளர் கட்சி மற்றும் அந்தக் கட்சி சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி வருகிறார்.