கம்யூனிஸ்ட் கொரில்லா படையினருடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை: பிலிப்பைன்ஸ் அரசு முடிவு

நார்வே நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, கம்யூனிஸ்ட் கொரில்லா படையினருடன் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ரொட்ரிகோ டுடெர்டோ

இரண்டு தரப்பினரும் காலக்கெடு இல்லாமல், யுத்த நிறுத்தத்திற்கு உடன்படுவார்கள் என நார்வே வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி 1968-ல் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இதில் 30,000 பேர் இறந்தனர்.

அடுத்த ஆண்டிற்குள் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களோடு பரந்த அளவில் சமாதான உடன்படிக்கையை எட்ட முடியும் என பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.