தென்னாப்பிரிக்க அதிபருக்கு நெருக்கமான குடும்பம் அதன் வர்த்தகப் பங்குகளை விற்பதாக அறிவிப்பு

படத்தின் காப்புரிமை

தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸூமாவின் மீது முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டச் செல்வந்தக் குடும்பம், நாட்டின் வர்த்தகங்களில் அது வைத்திருக்கும் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் முடிவுக்குள் இதனை முற்றிலும் செயல்படுத்தப் போவதாக குப்தா குடும்பம் கூறியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த குடும்பம், அமைச்சரவை தெரிவில் செல்வாக்கு செலுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதில் எவ்வித ஈடுபாடும் இல்ல என்று மறுக்கும் குப்தா குடும்பத்தினர் தாங்கள் அரசியில் சித்து விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.