இத்தாலி நிலநடுக்கப் பேரழிவுகள் (புகைப்படத் தொகுப்பு)

  • 28 ஆகஸ்ட் 2016

இத்தாலியின் மத்தியப் பகுதியை தாக்கிய நிலநடுக்கம் அந்நாட்டிற்கு பேரழிவை உருவாக்கியிருக்கிறது. சுமார் 300 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ரோம் மற்றும் வெனிஸிலும் பெரும் நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த இயற்கைப் பேரழிவை கேமரா கண்களில் காணும் புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 25, 2016 – பெஸ்காரா டெல் டிரொன்டோவில் சேதமடைந்தக் கட்டிட இடிபாடுகள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 25, 2016 – அமத்ரைஸ் நகரில் இறந்தோருக்காகத் தயாராக இருக்கும் சவப் பெட்டிகள்

இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஆகஸ்ட் 24 ஆம் நாள் அதிகாலையில் ரிக்டர் அளவில் 6.2 - ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 25, 2016 – அமத்ரைஸ் நகரில் இடிபாடுகளுக்கு இடையில் உயிர் தப்பியவர்களை தேடும் மீட்புப் பணியாளர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இடிபாடுகளை பார்வையிடும் காவல் துறையினர்

300 பேரை பலிகொண்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு பலமுறை பின்னதிர்வுகள் ஏற்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கட்டிட இடிபாடுகளில் தேடுதல் வேட்டையில் அவசரகாலப் பணியாளர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption அமத்ரைஸ் நகரில் தேடல் மற்றும் மீட்புதவி பணியின் போது இடிபாடுகளை அகற்றும் தன்னார்வலர்கள்

மிகவும் பலமான ஒரு பின்னதிர்வால் முக்கிய பாதையில் இருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்து, வழிப்பாதை துண்டிக்கப்பட்டது

படத்தின் காப்புரிமை Getty
Image caption மோப்ப நாயின் உதவியோடு பாதிக்கப்பட்டோரை தேடுகின்ற மீட்புதவி மற்றும் அவசரகாலப் பணியாளர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption நிலநடுக்க இடிபாடுகளில் புதையுண்டு இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் மீட்புதவியாளர்கள்

பல பின்னதிர்வுகளால் மீட்புதவி பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption செல்ல நாயை காப்பாற்றி எடுத்து செல்லும் பெண்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இடிபாடுகளுக்கு மேலே சோகமாய்...

உம்பிரியா, லேசியோ மற்றும் மார்ச்சே மாகாணங்களில் இருக்கும் மலை நகரங்களும் கிராமங்களும் மோசமாக சேதமடைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty
Image caption சேதமடைந்தக் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் செய்வதறியாது திகைப்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து மனம் வெதும்பி அழுகிறார்

அமத்ரைஸ் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption அமத்ரைஸில் சேதமடைந்த கட்டிடங்களின் குடியிருப்புவாசிகள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption சேதமடைந்த வீட்டை நினைத்து சோகம்

அமத்ரைஸ் நகரில் நிகழ்ந்த பெரியதொரு பின்னதிர்வானது, இடிபாடுகள் தங்கள் மீது விழுவதிலிருந்து மீட்பு உதவியாளர்களை தப்பியோட செய்தது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption இடிபாடுகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டோர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இடிபாடுகளில் சிக்குண்ட மனிதரை தூக்கிச் செல்லும் மீட்புதவியாளர்கள்

உணவு திருவிழாவையொட்டி பலர் வந்திருந்ததால், அமத்ரைஸ் நகரில் மட்டும் 200 பேர் இறந்துள்ளதாக நகர மேயர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption இடிபாடுகளில் சிக்குண்டவருக்கு மீட்புதவி
படத்தின் காப்புரிமை Getty
Image caption நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்வோருக்கு தயாராகும் கூடாரங்கள்

ஆகஸ்ட் 28 ஆம் நாள் இத்தாலியின் அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கின்ற ஒரு நாள் வருமானம் நிலநடுக்கத்திற்கு பிந்தைய நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption முகத்தில் ஏற்பட்டக் காயங்களுக்கு சிகிச்சைப் பெறுகின்ற பெண்ணொருவர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜிம்னாஸ்டிக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சவப் பெட்டிகள்

நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்காக ஆகஸ்ட் 27 ஆம் நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 27 ஆம் நாள் நடைபெற்ற இறுதி சடங்கு மற்றும் தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆழா... துயரில்...

இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆகஸ்ட் 27 ஆம் நாள் நடைபெற்ற இறுதி சடங்கு மற்றும் தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு