லாகூர்: போலிசாருடன் நடந்த மோதலில் நான்கு தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அந்நாட்டு தீவிரவாத எதிர்ப்பு போலிசார், தங்களின் பாதுகாப்பு நடவடிக்கையின் போது நான்கு தீவிரவாதிகளை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பாகிஸ்தான் போலிசார் (கோப்புப் படம்)

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை போலீசார் சோதனையிட்ட போது, தீவிரவாதிகள் போலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், அவ்விடத்தில் பதுங்கியிருந்த மேலும் மூன்று தீவிரவாதிகள் தப்பிவிட்டனர்.

தங்களால் கொல்லப்பட்ட நால்வரும் லக்ஷ்கர் -இ -ஜாங்க்வி என்ற கடும்போக்கு சுன்னி குழுவினரை சேர்ந்தவர்கள் என்று போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தீவிரவாதிகளுக்கு லாகூரில் நடந்த இரண்டு தாக்குதல்களில் பங்குள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடந்த தாக்குதலும், அதே ஆண்டில் லாகூர் நகரின் மூன் அங்காடியில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாக காரணமாக இருந்த மற்றொரு தாக்குதலும், இக்குழுவால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.