ரஷியா- துருக்கி விமானப் போக்குவரத்துக்கு தடை நீக்கம்

துருக்கி மற்றும் ரஷியாவிற்கு இடையேயான தனி விமானப் போக்குவரத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் ரஷிய பிரதமர் திமித்ரி மெட்வடேவ்.

படத்தின் காப்புரிமை AFP

துருக்கி - சிரியா எல்லையில் ரஷிய போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதற்கு துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் வருத்தம் தெரிவித்ததையடுத்து இந்த தடை ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

நவம்பரில் நடந்த இந்த நிகழ்வு ரஷியாவை கோபமூட்டியதால், துருக்கியின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

இந்தத் தடை, துருக்கியின் சுற்றுலாத் துறையை பெரிதாக பாதித்தது; 95 சதம் ரஷிய சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.