சிரியாவில் துருக்கி வான்வழி தாக்குதல்: 35 பேர் பலி

வடக்கு சிரியாவில் துருக்கியின் தொடர் வான்வழி தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போரைக் கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

ஜெப் எல் குஸ்ஸா கிராமத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 20 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர் என சிரியாவின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வான் வழி தாக்குதலில் அல் அமர்னா என்னும் இடத்தில் உள்ள விவசாயப் பண்ணையில் 15 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரத்தில் தொடங்கிய தாக்குதலில், சிரியா போராளிகளின் ஆதரவில் துருக்கி டாங்கிகள் மற்றும் படைகள், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடமிருந்து பகுதிகளை கைப்பற்றி அமெரிக்க ஆதரவு ஒய் பி ஜி குர்திய படைகளுடன் மோதலில் ஈடுபட்டது.

யுபிரேட்ஸ் நதியின் கிழக்கில் குர்திய படைகளை கட்டாயமாக பின்வாங்குமாறு துருக்கி வலியுறுத்தியது.

துருக்கி, குர்திய கிளர்ச்சி அமைப்புடன் தென் கிழக்கு துருக்கியில் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.