உஸ்பெகிஸ்தான் அதிபருக்கு மருத்துவ சிகிச்சை

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் நீண்டக் கால அதிபரான இஸ்லாம் கரிமோவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அரிதான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்கள் எதுவும் குறிப்பிடாமல், 70 வயது அதிபர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைப் பெற்று வருவதாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் சில மணி நேரங்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதிருப்திகளை சகித்துக் கொள்ளாத கரிமோவ், முன்னாள் சோவியத் குடியரசை 1989 -ஆண்டிலிருந்து ஆண்டு வந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன் மாரடைப்பு என்று கிளம்பிய வதந்தி, ஆட்சிக்கான போட்டி குறித்த ஊகங்களை தூண்டியது.