மூத்த இஸ்ரேல் தலைவர் பெஞ்சமின் பென்-எலிஸர் மரணம்

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான பெஞ்சமின் பென்-எலிஸர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்புப் படம்

இராக்கில் பிறந்த பென்-எலிஸர், அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றினார்.

தொழிலாளர் கட்சியில் முக்கிய பதவி வகித்த பென்-எலிஸர், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி உள்பட பல முக்கிய அரசு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபு உலகில் உள்ள முக்கியத் தலைவர்களுடன் இஸ்ரேலின் சார்பாக பேச்சுவார்த்தையாளராக அடிக்கடி பெஞ்சமின் பங்கேற்பது வழக்கமாகும். எகிப்து தலைவர் ஹோஸ்னி முபாரக்குக்கு நெருக்கமான இஸ்ரேலிய அரசியல்வாதியாக பென்-எலிஸர் பார்க்கப்பட்டார்.

கடந்த ஆண்டு லஞ்சம், கருப்பு பண குற்றச்சாட்டு மற்றும் வேறு சில குற்றச்சாட்டுக்கள் பென்-எலிஸர் மீது சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.