தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து ஜீல்மா உருக்கம்

பிரேசிலில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிபர் ஜீல்மா ரூசெஃப் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணையின் போது, ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், தனது இடைநீக்கத்திற்கு எதிராகவும் வாக்களிக்குமாறு செனெட் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

உறுப்பினர்கள் நிறைந்திருந்த செனட் அவையில் பேசியபோது, நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும், கடந்த 13 வருடங்கள் பெற்ற நன்மைகள் அழிந்து போய்விடும் எனவும் ரூசெஃப் வாதாடினார்.

மிதமான தொனியில் பேசியபோதும் அவ்வப்போது அழுகைக்கு நெருங்கி வரும் தொனியும் தென்பட்டது; சட்ட விரோதமாக பட்ஜெட்டை பயன்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் மறுத்துள்ளார்.

இந்த வாரத்தின் இறுதியில் வாக்களிக்க இருக்கும் செனேட் அவை உறுப்பினர்களால் அவர் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

ஜீல்மா ரூசெஃப்பை பதவியிலிருந்து நீக்கிவிட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவைப்படுகிறது. அவ்வளவு வாக்குகள் நிச்சயமாக கிடைக்கும் என்று அவர்கள் உறுதியாக உள்ளனர்.