செனட் அவை குற்றச்சாட்டின் விசாரணையில் ரூசெஃப் இன்று சாட்சியம்

இடைநீக்கம் செய்யப்பட்ட பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், செனட் அவையின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிக்க இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

மே மாதம் கட்டாயமாக பதவியிலிருந்து இறக்கப்பட்ட தில்மா ரூசெஃப், தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலிகடா ஆனவர் என்று கூறுகின்றார்.

தான் தவறுகள் செய்ததாக கூறப்படுவதை அவர் மறுத்து வருகிறார்.

பிரேசிலில் அதிகரித்து வரும் நிதி பற்றாகுறையை மறைப்பதற்காக, வரவு செலவு திட்டத்தில் தவறாக கணக்குக் காட்டியதாக செயல்பட்டதாக இடது சாரி தலைவரான தில்மா ரூசெஃப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்றைய அவரது சாட்சியம் அவரை காப்பாற்றாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், 1970 ஆம் ஆண்டுகளில் ராணுவ அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான தில்மா ரூசெஃப் மீது இன்னும் சிறிது அனுதாபம் உள்ளது.