சீனாவின் “ஜாக் த ரிப்பர்” தொடர் கொலையாளி கைது

படத்தின் காப்புரிமை THINKSTOCK

ஒரு தசாப்த காலமாக 11 பெண்களின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தொடர் கொலையாளி ஒருவரை கைது செய்திருப்பதாக சீன காவல் துறையினர் நம்புகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த லண்டனின் அபாயகரமா கொலையாளியை பிரதிபலிக்கும் வகையில் இவர் செய்த அடுத்தடுத்த கொலைகள் அமைந்ததால், இவர் சீனாவின் “ஜாக் த ரிப்பர்” என்று அறியப்பட்டார்.

படத்தின் காப்புரிமை THINKSTOCK

மளிகைக் கடை நடத்திவரும் 52 வயதான காவ் ச்செங்யோங், இந்த கொலைகளை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

இவரது உறவினர் ஒருவரின் டிஎன்எ இந்த கொலைகளோடு தொடர்புடையதாக இருந்த பிறகு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையாளி இளம் பெண்களை இலக்கு வைத்து, அவர்களை வீடு வரை பின் தொடர்ந்து சென்றது, பெரும் பீதியை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.