புர்கினி தடைக்கு இடைநிறுத்தம்: ஐ.நா. வரவேற்பு

படத்தின் காப்புரிமை .

புர்கினி என்று அறியப்படும் முஸ்லிம் பெண்கள் அணியும் முழு நீள நீச்சல் உடையை, ஃபிரான்ஸில் சில கடற்கரைகளில் அணிய இருந்த தடையை, அந்நாட்டு உயரிய நீதிமன்றங்களில் ஒன்று இடைநிறுத்தியிருக்கும் உத்தரவை ஐ.நா. மனித உரிமை ஆணையம் வரவேற்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters

ஃபிரான்சின் உள்ளூர் அதிகாரிகள் பலரால், மத்தியதரைக்கடல் கடற்கரைகளில் நிறைவேற்றப்பட்டிருந்த இது தொடர்பான தடைகள், முஸ்லீம்களை களங்கப்படுத்துவதால் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Twitter

ஃபிரான்ஸின் சில மேயர்கள் இந்த தடையை தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை VINTAGENEWS

கடந்த வாரம் நீஸ் நகரக் கடற்கரையில் உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் நீச்சல் உடையை அகற்றுவதற்கு ஒரு முஸ்லீம் பெண்ணை நான்கு காவல் துறையினர் கட்டாயப்படுத்துகின்ற புகைப்படங்கள் வெளியாகி, முஸ்லீம் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை பரப்புரையாளர்களின் மத்தியில் கோபத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.