பிரேசில் செனட் அவையில் நீண்ட விசாரணையை எதிர் கொண்ட ஜீல்மா

பிரேசில் செனட் அவையில், தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் இறுதி கட்ட விசாரணையில் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரேசில் அதிபர் ஜீல்மா ரூசெஃப், 12 மணி நேரத்துக்கும் மேலாக கடும் எதிர்ப்பு மிகுந்த குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிரேசில் செனட் அவை

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட அரசியல் சூனிய வேட்டையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜீல்மா ரூசெஃப் செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

கடந்த தசாப்தத்தின் சமூக பலன்களும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளது என்று ஜீல்மா கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

பிரேசிலின் தேசிய பட்ஜெட்டை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்ற விசாரணைக்கு எதிராக தன்னை பாதுகாக்கும் முயற்சியில் ஜீல்மா ஈடுபட்டுள்ளார்.

இந்த வார இறுதியில், மூன்றில் இரண்டு பங்கு செனட் உறுப்பினர்கள் ஜீல்மாவுக்கு எதிராக வாக்கழித்தால், அவர் நிரந்தரமாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்.