கோஃபி அன்னானை பிரபல ஹாலிவுட் நடிகரோடு குழப்பிய அமைப்பு

ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னானை விமர்சிக்க எண்ணிய மியன்மரின் ஒரு தேசியவாத அமைப்பு அவரை ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேனோடு குழப்பிக் கொண்டது.

படத்தின் காப்புரிமை AFP

ஒரு ஃபேஸ்புக் பதிவில், கோஃபி அன்னான் மியான்மரின் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கா மக்களின் அவல நிலையை ஆராயும் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டத்தை கண்டித்தது.

ஆனால் அந்தப் பதிவில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் ஆஸ்கர் விருது வென்ற நடிகரின் படம் வெளியிடப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் இந்த பதிவை பற்றி பரிகசிக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பு தவறு நடந்தது இயல்பு என்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் திரைபடங்களை பார்ப்பதில்லை என்றும் கூறியது.