ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடியின பெண்

ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு முதல் முறையாக ஒரு பழங்குடி பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை
Image caption ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

லிண்டா பர்னி தனது முதல் உரையில் தான் தனது அரசியல் வாழக்கையை நடத்த தனது ''குலத்தின் போராட்ட மன உறுதியோடு'' வந்திருப்பதாக தெரிவித்தார்.

லிண்டா பர்னி பேசுகையில், தான் அணிந்துள்ள பாரம்பரிய அங்கியில் குலமரபு சின்னங்கள் உள்ளன. அவை தனது வாழ்க்கை கதையை கூறுகின்றன என்றார்.

இனப் பாகுபாடு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், ஆஸ்திரேலியாவின் உண்மையான பூர்வகுடிகள் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் இன்னும் அதிக அளவில் ஏழ்மையிலும், மோசமான சுகாதாரம் மற்றும் சிறைபட்டும் தவிக்கின்றனர் என்று கூறி எச்சரித்தார்.