மேற்குக்கரை பகுதியில் புதிய யூத குடியிருப்புகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக்கரை பகுதியில், 285 புதிய யூத குடியிருப்புகள் கட்ட இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள 175 குடியிருப்புகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் சேர்த்து இதுவரை நடந்த மொத்த கட்டுமானமும் அல்லது சட்டரீதியாக்கப்பட்டவைகளும் 2000க்கும் அதிகமானதாகும் என்று கண்காணிப்பு அமைப்பான பீஸ் நவ் தெரிவித்துள்ளது..

தொடர்ச்சியான சர்வதேச விமர்சனத்தால் இந்த விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.

ஐ,நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா ஆகியவை கொண்ட குழுவின் அறிக்கையில், எதிர்காலத்தில் பாலத்தீன அரசிற்கு சொந்தமாகப்போகும் நிலத்தில் இந்த கட்டுமானத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விமர்சனத்தை பொருத்தமில்லாத ஒன்று என்று இஸ்ரேல் நிராகரித்துள்ளது.