நைஜீரியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியான நிதி நெருக்கடி

ஆப்பிரிக்காவில், பெரிய பொருளாதார சக்தியான நைஜீரியா, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலங்களில், முதல் முறையாக தற்போது அதிகாரப்பூர்வாமாக நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான புள்ளிவிவரங்களின் படி, நைஜீரியாவின் பொருளாதாரம் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக சுருங்கியுள்ளது. நிபுணர்கள் கணிப்பைத் தாண்டி அதிகமான சரிவை சந்தித்துள்ளது.

முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.4 சதவீதமாக சுருங்கியுள்ளது.

நைஜீரியாவின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியை தான் பலமாக நம்பியுள்ளது. உலக அளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவானது நைஜீரியாவை அதிகமாக பாதித்துள்ளது. மேலும் எண்ணெய் தயாரிப்பு தளமாக உள்ள நைஜர் டெல்டா பகுதியில் மீண்டும் துவங்கியுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளும் காரணம் ஆகும்.