கொத்தணிக்குண்டுகளால் கடந்த ஆண்டில் 400க்கும் அதிகமானோர் பலி

பெரும்பாலும் சிரியா, ஏமன் மற்றும் யுக்ரெய்ன் ஆகிய இடங்கள் உட்பட 2015ஆம் ஆண்டில் கொத்தணிக்குண்டுகளினால் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக கொத்தணி குண்டு வெடிபொருட்களுக்கான கூட்டணியின் அறிக்கை கூறியுள்ளது.

Image caption கொத்தணிக்குண்டுகளால் கடந்த ஆண்டில் 400க்கும் அதிகமானோர் பலி

இந்த மூன்று நாடுகளிலும் கொத்தணிக்குண்டுகள் தடை செய்யப்படவில்லை. இறந்தவர்களில் பொதுமக்கள் 97 வீதத்தினராவர்.

இவற்றினால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிறார்களே 2010முதல் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொத்தணிக்குண்டுகளால் பலியானவர்களில் முக்கால்வாசிப் பேர்களாவர்.

ஒரு இடத்தில் விழும் கொத்தணிக்குண்டுகள் பரவலாக அந்த பிராந்தியம் எங்கும் சிதறிவெடிக்கும் திறன் கொண்டவையாகும்.

சிரியாவில் 248 பேரும், ஏமனில் 104 பேரும், யுக்ரெய்னில் 19 பேரும் பலியாகியுள்ளனர்.