பாகிஸ்தான் - ஆஃப்கன் எல்லையில் முக்கிய பாதை திறப்பு

படத்தின் காப்புரிமை EPA

இருவாரங்களாக நிலவிய அரசியல் அழுத்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை கடக்கும் இரு முக்கிய பாதைகளில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கன் ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைப்பகுதியில் கற்களை தூக்கி எறிந்து கொடியை கொளுத்தியதை தொடர்ந்து, பலுசிஸ்தான் மற்றும் கந்தஹார் மாகாணங்களுக்கிடையே இருந்த நட்புறவு கதவு அடைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

இதைத்தொடர்ந்து, எல்லைப்பகுதியின் மற்றொரு பக்கத்தில் பாகிஸ்தானியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஃப்கன் அரசாங்கத்திடமிருந்து எழுத்துப் பூர்வமான ஒரு மன்னிப்பு கடிதம் பெற்ற பிறகே இந்த கதவு திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், ஆஃப்கன் தரப்பு இதனை உறுதிப்படுத்தவில்லை.

ஆஃப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் உதவிகளை மேற்கொள்வதற்கு இது முக்கிய எல்லைப்பகுதியாகும்.