தென்கொரிய கப்பல் நிறுவனத்தின் சேவை முடக்கம்

படத்தின் காப்புரிமை Getty
Image caption கோப்புப்படம்

திவால் ஆவதிலிருந்து பாதுகாப்பதற்கு விண்ணப்பித்த பிறகு, தன்னுடைய கொள்முதல் கலன்கள் உலக அளவிலுள்ள துறைமுகங்களுக்கு செல்வதற்கான சேவை மறுக்கப்படுவதாக தென் கொரியாவின் மிக பெரிய கப்பல் நிறுவனமான ஹான்ஜின் தெரிவித்திருக்கிறது.

கொள்முதல் கலன்களை சுமந்து செல்லும் இந்த நிறுவனத்தின் 44 கப்பல்களுக்கு சேவை மறுக்கப்பட்டுள்ளது அல்லது துறைமுகங்களில் நுழைவதற்கு இந்த கப்பல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஹான்ஜின் கப்பல் நிறுவனத்தின் நிதி ஆதரவாளர்களும், பங்காளர்களும் இதற்கு ஒரு தீர்வை கண்டறிவது வரை இந்த கப்பல்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

உலகிலேயே ஏழாவது மிக பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் ஹான்ஜினின் இந்த தோல்வி, இந்த தொழில்துறையின் மிகவும் விறுவிறுப்பான கால கட்டத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.