உஸ்பெகிஸ்தான் அதிபர் கரிமோஃப் காலமானார்

படத்தின் காப்புரிமை Getty

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உஸ்பெகிஸ்தானை ஆட்சிபுரிந்து வந்த அதிபர் இஸ்லாம் கரிமோஃப், காலமாகிவிட்டதாக அந்நாடு அறிவித்திருக்கிறது.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லாததால் அவருடைய உடல் நலம் பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன.

மனித உரிமைகளுக்கு எதிராக பரவலாக விமர்சனம் செய்யப்பட்டு வந்த சர்வாதிகார ஆட்சியாளர் கரிமோஃபுக்கு அடுத்ததாக பதவியேற்பதற்கு வாரிசு இருப்பதாக தோன்றவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கரிமோஃபின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோஃப் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக துருக்கி பிரதமர் மட்டுமே கூறியிருந்தார்.