பாகிஸ்தான் நீதிமன்ற தற்கொலை தாக்குதல் பலி 12-ஆக உயர்வு

பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் தற்கொலை தாக்குதல்தாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்தான் நகரில் இருக்கும் நீதிமன்ற பகுதிக்குள் ஓடுவதற்கு முன்னதாக இந்த தாக்குதல்தாரி ஒரு கையெறி குண்டை வீசியதாகவும், குண்டு ஒன்றை வெடிக்க செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கினறனர். டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இன்னொரு சம்பவத்தில், பெஷாவரில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை, நான்கு ஆயுததாரிகளைkd கொன்று, முறியடித்திருப்பதாக ராணுவம் தெரிவிக்கிறது.

இந்த இரு தாக்குதல்களையும் நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்தின் பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் தெரிவித்திருக்கிறது.