மலேசியாவிலும் ஸிகா வைரஸ் தொற்று; இனம்காணப்பட்டார் முதல் நபர்

படத்தின் காப்புரிமை AP

பிறக்கின்ற குழந்தைகளின் மூளை சரியாக வளராமல் இருக்க காரணமாகும் ஸிகா வைரஸ், உள்ளூரில் இருக்கும் கொசு மூலம் பரவியிருக்கும் முதல் நபரை மலேசியா சுகாதார அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.

நாட்டின் வட மாநிலத்திலுள்ள சபாவில் வாழும் 61 வயதான நபர் ஸிகா தொற்றுடைய கொசுவிடமிருந்து இந்த தொற்றை பெற்றிருக்கக்கூடும் என்று சுகாதரா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA

பல நாட்களுக்கு முன்னர், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டு வந்த பெண்ணொருவரிடம் ஸிகா வைரஸ் தொற்று வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதை மலேசியா கண்டறிந்தது.

இதற்கு அடுத்திருக்கும் சிங்கப்பூரில் 189 ஸிகா தொற்றுடையோரை இதுவரை கண்டறிந்திருப்பது, கொசுக்களின் இனப்பெருக்க அடிப்படைகளை நீக்கிவிடுவதற்கான விரிவான பரப்புரையை அரசு தொடங்குவதற்கு வழிகோலியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்