நைஜீரியாவில் 14 எண்ணெய் தொழிலாளர்கள் கடத்தல்

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

நைஜீரியாவில் குறைந்தது 14 எண்ணெய் தொழிலாளர்களும் அவர்களது ஓட்டுநரும் கடத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சென்ற பேருந்து நைஜீரியாவின் தெற்கே உள்ள ரிவர்ஸ் மாகாணத்தில் துப்பாக்கித்தாரிகளால் நிறுத்தப்பட்டது.

பிராந்திய தலைநகரான போர்ட் ஹர்கோர்டிற்கு இந்த தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பின்னர் அந்த பேருந்து கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போலிசார் புதர் மண்டிய பகுதிகளிலும், நீர்வழி பாதைகளிலும் தேடுதல் பணியை மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால், தொழிலாளர்கள் யாரால் கடத்தப்பட்டனர் என்பது தெரியவில்லை என்கிறார்கள்.

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பணத்திற்காக பிணைக் கைதிகளாக பிடிப்பது மிகவும் பொதுவான ஒன்று.

வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் செல்வ செழிப்புடன் இருக்கும் உள்ளூர்வாசிகளே வழக்கமாக குறிவைத்து கடத்தப்படுவது வழக்கம்.