ராணுவத்திற்கு அதிக அதிகாரங்கள், பிலிப்பைன்ஸில் அமலாகிறது சட்ட ஒழுங்கீன நிலை

படத்தின் காப்புரிமை

சொந்த நகரில் நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகியிருப்பதை தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ ராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

70 பேர் காயமடைந்துள்ளனர். தவாவ் நகரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்த்த பிறகு, சட்ட ஒழுங்கீன நிலையை அதிபர் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை

வழக்கமாக காவல்துறையினர் செய்து வருகின்ற நடவடிக்கைகளை போல, நகரின் மையங்களில் படைப்பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவதை இந்த அறிவிப்பு அனுமதித்திருக்கிறது. போலிசார் மேற்கொள்ளும் சோதனைகளை ராணுவம் செய்ய முடியும்.

இவ்வாறு அதிகாரத்தை வழங்குவது ராணுவ ஆட்சியை புகுத்துவது அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமியவாத கிளர்ச்சி மற்றும் கம்யூனிஸ்ட் கிளச்சியாளர்களின் ஆயுதப் போராட்டம் ஆகியவற்றின் தாயகமாக திகழும் மின்டனாவ் தீவின் தெற்கு பிரதேசத்தில் தவாவ் உள்ளது.