மாசு வெளியேற்றம் தொடர்பான உலக ஒப்பந்தம் - கூட்டறிக்கை வெளியாகுமா?

உலகிலேயே மிக அதிக அளவில் மாசு வெளியேற்றும் நாடான சீனா, கடந்த ஆண்டு பாரிஸில் எட்டப்பட்ட பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது

படத்தின் காப்புரிமை AP

சீனாவின் கிழக்கில் அமைந்துள்ள ஹாங்சொள நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகள் மாநாட்டுக்கு முன்னதாக சீன நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

மிக அதிக அளவில் மாசு வெறியேற்றும் இன்னொரு நாடான அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில சேர்வதை உறுதிசெய்ய இருப்பதால், அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஷி ஜீங்பிங்கும் இன்னும் அடுத்த சில மணிநேரங்களில் சந்திக்கிறபோது கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டின் வர்த்தகப் பகுதியின் தொடக்கமாக அமைந்த முக்கிய உரையாற்றிய ஷி ஜீன்பிங், இடை நிலையிலிருந்து சீனா உயர் நிலை பொருளாதார வளர்ச்சியை அனுபவிப்பது தொடரும் என்று தன்னுடைய தொலைநோக்கு பார்வையை வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்