ஒபாமா சீனாவில் இறங்கியபோது ஏற்பட்ட நெறிமுறை சிக்கல்களால் சர்ச்சை

படத்தின் காப்புரிமை Reuters

ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை நெறிமுறை சிக்கல்களை சந்தித்திருப்பது, அமெரிக்க ஊகடங்களில் எதிர்மறை கருத்துக்களை தூண்டியுள்ளது.

வழக்காமாக வரக்கூடிய சுழலும் படிகள் மூலம் சிவப்பு கம்பள விரிப்பில் வந்தடையும் வழியில் அதிபர் ஒபாமா விமானத்தைவிட்டு கீழிறங்கவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால், விமானத்தின் நடுவில் கீழ் பகுதி வழியில் இருக்கும் வாயில் மூலம் கீழே இறங்கினார்.

செய்தியாளர்கள் அவரை நெருங்கி அணுகுவது சீன பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது.

ஒபாமா, சீன அதிபர் ஷி ஜீன்பிங்கை சந்தித்த இடத்திற்கு நெருங்கி செல்வதற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு சேவை நிறுவனப் பணியாளர்கள் சீனரோடு வாக்குவாதம் நடத்த வேண்டியதாயிற்று.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவிலிருந்து வருவோரின் எண்ணிக்கையால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை கூறி, நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை திரித்து விடாமல் இருக்க செய்தியாளர்களிடம் ஒபாமா கேட்டுக்கொண்டார்.

ஆனால், ஊடகங்கள் வரை நெருங்கி வருவதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியதை அவர் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்