ஜெர்மனி: மெர்கலின் பலத்தை சோதிக்கும் பிராந்திய தேர்தலில் இன்று வாக்கெடுப்பு

படத்தின் காப்புரிமை Getty

ஜெர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க் மேற்கு போமெரானியாவின் (அல்லது மெக்லென்பர்க் வோர்போமேர்ன்) பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு வரயிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மக்களிடம் கொண்டிருக்கும் பலத்தை சோதனை செய்யும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty

ஜெர்மானிய சான்சலர் அகதிகளை தாராளமாக அனுமதிக்கும் கொள்கையை அறிவித்து சரியாக ஓராண்டு ஆகியுள்ளது.

இந்த முடிவுக்கு விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏங்கலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியானது, குடியேறிகளுக்கு எதிரான ஜனரஞ்சக ஜெர்மானிய மாற்றுக் கட்சியிடம் இருந்து வலுவான சவால்களை சந்தித்து வருகிறது.

கடந்த தேர்தலின்போது முன்னிலை பெற்ற சோசியல் ஜனநாயக கட்சியினரே பெரிய கட்சியாக தொடர்வர் என்று கணிக்கப்பட்டுள்ளது