வத்திக்கானில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்ட சடங்கு

படத்தின் காப்புரிமை AP

ரோமன் கத்தோலிக்க பெண் துறவி அன்னை தெரஸாவை போப் பிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்த இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty

இந்த புனிதப்பட்டம் வழங்கும் பூசையில் ரோமின் புனித பேதுரு சதுக்கத்திற்குள்ளும், அதனை சுற்றியும் பல்லாயிரக்கணக்கான புனித பயணிகள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP

அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா 1997 ஆம் ஆண்டு இறந்தார்.

இந்தியாவின் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மக்களை பராமரிப்பதற்காக அன்பின் மறைபரப்பு கன்னியர் சபையை அவர் நிறுவினார்.

படத்தின் காப்புரிமை Reuters

கொல்கத்தாவின் புனித தெரஸா என்று அவர் அறியப்படுவார்.

படத்தின் காப்புரிமை Reuters

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவது, அவர் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பு பற்றிய சர்ச்சையை மீண்டும் தூண்டும் என்று செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அன்னை தெரஸாவின் பணிகள் ஏழ்மையையும், துன்பத்தையும் அதிகரிக்க செய்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவருடைய நல்வாழ்வு மையங்கள் சுகாதரத்தையும் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.