துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்: ஒபாமா

துருக்கியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப் படம்

சீனாவில் நடைபெறும் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டையொட்டி, எகிப்து அதிபர் ரசீப் தயிப் எர்துவானை சந்தித்து பேசிய போது ஒபாமா இதனை தெரிவித்தார்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னணியில், அமெரிக்காவை சார்ந்த இஸ்லாமிய மதகுரு ஃபெத்துல்லா குலன் இருந்ததாக குற்றம்சாட்டிய துருக்கி, அவரை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

ஆனால், ஃபெத்துல்லா குலனை துருக்கியிடம் ஒப்படைப்பது குறித்து ஒபாமா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தனது பங்கு உள்ளதாக கூறப்படுவதை ஃபெத்துல்லா குலன் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்