சோமாலியாவில் ஊடக சுதந்திரம் காக்கப்பட வேண்டும்: ஐ.நா அறிக்கை

கடந்த நான்கு வருடங்களில் 30 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ள சோமாலியாவில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க இன்னும் பல நடவடிக்கைகள் தேவை என ஐ.நா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை

2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 120 பத்திரிக்கையாளர்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் மூடப்பட்டு விட்டன; இந்த மாதத்தின் பிற்பாதியில் புதிய சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் கருத்து சுதந்திரம் அங்கு மதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டிலிருந்து, 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பல அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்